அத வெச்சி தான் சூர்யாவை உயரமா காட்டினோம் - பல வருட சஸ்பென்ஸ் உடைத்த கவுதம் மேனன்!!
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா
சிவகுமாரின் மகனாக அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் அறியப்பட்ட தமிழ் நடிகராக மாறியுள்ளார் சூர்யா. சில காலம் விஜய் - அஜித் இருவரும் பெரிய ஹிட் படங்களை கொடுக்க தடுமாறிய நேரத்தில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார் சூர்யா.

காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், அயன், கஜினி என ஒரு சமயத்தில் அவர் நடித்து படங்கள் வரிசையாக ஹிட் தான். இதில்,அநேக படங்கள் தெலுங்கிலும் பெரிய ஹிட் படங்கள். தற்போது தன்னை பான் இந்தியன் நாயகனாக நிலைநிறுத்தி கொள்ள சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

படம் அக்டோபர் 10 - ஆம் தேதி வெளிவரவுள்ளது. சூர்யா மீது பலரும் வைக்கும் ஒரு விமர்சனம் அவர் சற்று உயரம் குறைவாக இருக்கிறார் என்பதே. இது குறித்து தற்போது ப்ளூசட்டை மாறன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உயரம்
அதில், படங்களில் சூர்யாவை உயரமாக காட்ட எடுக்கின்ற ஷாட்டுகள் லோ ஆங்கில் ஷார்ட்டாகத் தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சூர்யாவிற்கு பின் இருக்கும் எந்த ஒரு பொருளும் சூரியாவை விட உயரமாக தெரியாத படி பார்த்துக் கொண்டு தான் அந்த காட்சியை ஷூட் செய்வதாக கௌதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார் என குறிப்பிட்டு பதிவு வெளியிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதே போல மற்றுமொரு பேட்டியில், படத்தில் சமீரா ரெட்டியை தேர்வான பிறகு, சூர்யாவே சமீரா உயரமாக இருக்கிறார்.. சரியாக வருமா? என்றார். அதற்கு பிறகு தான் படத்தில் "அடியே கொல்லுதே" பாட்டில் உயரம் பார்க்கும் ஷாட் வைத்தேன்.
— Blue Sattai Maran (@tamiltalkies) July 13, 2024
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan