ஜோதிகா நடத்தை சரியில்லை!! தனியாக வந்த சூர்யா - சரமாரி கேள்வி கேட்ட பிரபலம்

Suriya Jyothika
By Karthick Apr 26, 2024 09:25 AM GMT
Report

சூர்யா ஜோதிகா தமிழ் சினிமாவின் மிக முக்கிய நட்சத்திர தம்பதிகள்

சூர்யா - ஜோதிகா 

கடந்த 11 செப்டம்பர் 2006-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது தியா, தேவ் என 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.

suriya jothika

திருமணத்திற்கு பிறகு சிறிய இடைவேளைக்கு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா 36 வயதினிலே, ராட்சசி, மலையாளத்தில் மம்முட்டியுடன் " காதல் தி கோர்", ஹிந்தியில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள "சைத்தான்" என வரிசையாக ஹிட் படங்களில் நடித்து வருகின்றார். சூர்யா சிறுத்தை சிவாவின் "கங்குவா" படத்தில் தீவிரம் காட்டி வருகின்றார்.

suriya jothika

இப்படத்திற்கு பிறகு அவர் கார்த்திக் சுப்புராஜ்ஜுடனும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கின்றார். அவ்வப்போது சினிமா நட்சத்திரங்களை குறித்து சர்ச்சையாக பேசும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஜோதிகா குறித்து தெவித்துள்ள கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

 நடத்தை சரியில்லை

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அடிக்கடி சினிமா பிரபலங்களை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ஓட்டு போடுவதற்காக விஜய் ரஷ்யாவில் சென்னை வந்தார். அது ஜனநாயக கடமை. பெரும்பாலான நடிகை நடிகர்கள் ஓட்டு போட்டார்கள்.

சிவக்குமார் - சூர்யாவை பிரித்த ஜோதிகா..? மும்பை போக காரணம்..? போட்டுடைத்த பிரபலம்

சிவக்குமார் - சூர்யாவை பிரித்த ஜோதிகா..? மும்பை போக காரணம்..? போட்டுடைத்த பிரபலம்

ஆனால் அதை கூட செய்ய தவறிவிட்டார் ஜோதிகா. இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்க்கும் போது சிவகுமாரின் நிலைமை என்னவாக இருக்கும். மகன் மட்டும் வந்து இருக்காரு ஆனால் மருமகள் வரல. இந்த நிலைமையில் ஜோதிகா தஞ்சாவூர் கோவில் சுத்தமாக இல்லை என்று குறை சொல்கிறார். ஜனநாயக கடமை இல்லாதவர், மனம் இல்லாதவர் எப்படி சமூக கருத்துக்கள் சொல்லலாம்.

suriya jothika

முதலில் இந்தியன் சிட்டிசனாக இருக்கணும் அப்புறம் மற்றவர்களிடம் இருந்து இந்தியன் சிட்டிசனை எதிர்பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை. மாமனார் மாமியாருக்கு அடங்கி கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கனும். இதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார். இவ்வாறு அந்த பேட்டியில் பயில்வான் பேசியுள்ளார்.