சண்டை போட்ட பத்திரிக்கையாளர்; மன்னிப்பு கேட்ட சூர்யா - நடந்தது என்ன?
கங்குவா ப்ரோமோஷன் நிகழ்வில் பத்திரிக்கையாளர் ஒருவர் சூர்யாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, தீஷா பதானி நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை(14.11.2024) பான் இந்தியா படமாக திரைக்கு வர உள்ளது.
இதுவரை சூர்யாநடிப்பில் அதிக செலவில் உருவான படம் கங்குவா. கங்குவா படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சூர்யாவிடம் வாக்குவாதம்
இந்நிலையில் நேற்று மும்பையில் கங்குவா படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. திட்டமிட்ட நேரத்திற்கு பத்திரிக்கையாளர்கள் வந்துள்ள நிலையில் படக்குழுவினர் வர தாமதம் ஏற்பட்டுள்ளது.
There is Ruckus In #Kanguva Event 🫸#Suriya patiently listens the complaint of security personnel's misbehavior. pic.twitter.com/L1nlMuHjxL
— Suriya Prabhas (@SuriyaPrabhas48) November 12, 2024
படக்குழுவினர் தாமதமாக வந்த போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், சூர்யாவை வழிமறித்து “எத்தனை மணிக்கு செய்தியாளர் சந்திப்பு எனக் கூறினீர்கள்? இப்போது மணி என்ன? நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது?" என தனது கையில் இருந்த வாட்சை காட்டி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, மற்ற இடங்களுக்குச் சென்று வருவதில் தாமதமாகிவிட்டது எனக்கூறி சூர்யா இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.