சூர்யா - ஜோதிகா மும்பையில் குடியேற இதுதான் காரணமாம் - வெளியான தகவல்

Suriya Jyothika Mumbai
By Sumathi Mar 24, 2023 06:30 PM GMT
Report

நடிகர் சூர்யா மும்பையில் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியுள்ளார்.

மும்பையில் வீடு

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

சூர்யா - ஜோதிகா மும்பையில் குடியேற இதுதான் காரணமாம் - வெளியான தகவல் | Suriya And Jyotika Shifted Mumbai Reason Here

சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மகள் படிப்பு

அங்கு தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்தது வைரலானது. மேலும், ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியுள்ளார்.

சூர்யா - ஜோதிகா மும்பையில் குடியேற இதுதான் காரணமாம் - வெளியான தகவல் | Suriya And Jyotika Shifted Mumbai Reason Here

தனது மகள் தியாவின் மேற்படிப்புக்காக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளார்களாம். இந்த வீட்டுக்கு அருகே பாலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்களின் வீடுகள் இருக்கின்றனவாம். மேலும் அப்பா, அம்மா, கார்த்தி ஆகியோர் மும்பை சென்றால் அவர்கள் தங்க ஏதுவாகவும் இந்த வீடு வாங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.