ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய முதன் முறையாக தமிழ் நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா ‘அகரம்’ அறக்கட்டளையினால் பல்லாயிரக்கணக்கான ஏழை, மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
கமல் கொடுத்த பரிசு
சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா உட்பட பல பிரபலங்கள் நடித்து வெளியான நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்சும் வழங்கினார் கமல்.
நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து, இந்தி நடிகை கஜோல் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.