கருவுக்குள்ளே சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் டாக்டர்ஸ் அசத்தல்!

Pregnancy Delhi
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

கருவுக்குள் இருந்த சிசுவிற்கு வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கருவுக்குள் சிசு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதுள்ள ஒரு பெண் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே 3 முறை கர்ப்பமடைந்து, சிசு இறந்தே பிறந்துள்ளது. இந்நிலையில், இந்த முறையும் குழந்தையின் இதயத்தில் கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது.

கருவுக்குள்ளே சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் டாக்டர்ஸ் அசத்தல்! | Surgery On Baby Inside Womb Delhi Aiims

இதய வால்வு ஒன்று சுருங்கி அதனால் இதயத்திற்குள் ரத்தம் சீராக செல்ல முடியாமல் இருந்துள்ளது. இதனை சரிசெய்ய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் முழுமையாக பரிசோதனை செய்து குழந்தைக்கு வயிற்றுக்குள்ளேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 அறுவை சிகிச்சை

அதன்படி, அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதல் உதவியுடன், தாயின் வயிறு வழியாக நுண்ணிய குழாயை செலுத்தி சிசுவின் இதயத்திற்குள் ஒரு சிறிய ஊசியை பொருத்தி இதய வால்வை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்கியிருக்கிறார்கள்.

இதனை 90 நிமிடங்களுக்குள் செய்து முடித்திருக்கிறார்கள். தொடர்ந்து, தாயும் அவரின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.