பீகாரில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் வயிற்றில் கரு - அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள்

By Nandhini May 31, 2022 07:19 AM GMT
Report

பீகாரில், மோதிஹரி பகுதியில் உள்ள ரஹ்மானியா மருத்துவமனைக்கு வயிறு வீக்கத்துடன் பிறந்து 40 நாட்களேயான குழந்தை ஒன்றை கொண்டு வரப்பட்டது.

வயிறு வீக்கத்துடன் இருந்ததால் பெற்றோர்கள் மிகுந்த பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வந்த அப்பெற்றோர்கள், வயிறு வீங்கியதால் குழந்தையால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, அக்குழந்தையை மருத்துவர் தப்ரீஸ் ஆசிஷ் என்பவர் பரிசோதனை செய்தார். அப்போது, சி.டி. ஸ்கேனில் பரிசோதனை செய்த போது டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வருகிறது என்று பெற்றோர்களிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, உடனடியாக அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்தக் கரு வயிற்றிலிருந்து அகற்றப்பட்டது. தற்போது அக்குழந்தையின் உடல்நிலை சீராகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது.

இது குறித்து டாக்டர் ஆசிஷ் கூறுகையில், இது ஒரு அரிய வகையான இயற்கையில் நடக்க கூடிய நிகழ்வு. இது கருவுக்குள் கரு என்று அழைக்கப்படுகிறது. 5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுபோன்று அரிய நிகழ்வு ஏற்படும் என்றார்.

5 ஆண்டுகளுக்கு முன் ஹாங்காங்கிலும், 2019ம் ஆண்டு இஸ்ரேலிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் வயிற்றில் கரு - அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் | Fetus In The Stomach