ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தால் அந்த அணிக்காகதான் விளையாடுவேன் - சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் வாய்ப்பு குறித்து சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா(38). இவர் இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 205 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி 5528 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி அவரை ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
ரெய்னா விருப்பம்
மேலும் போட்டிகளுக்கு நடுவே பல கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில், ரெய்னாவிடம் மீண்டும் ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தால் எந்த அணிக்காக ஆட ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினால் நானும் ரோகித்தும் இணைந்து விளையாடுவோம். அப்படி அவருடன் வான்கடேவில் பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
