கோலியும் நானும் களத்தில் சண்டை போட்டோம்; ஆனால் வெளியில்.. உண்மை உடைத்த கம்பீர்
கோலியுடனான உறவு குறித்து கம்பீர் பகிர்ந்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
கோலியுடனான உறவு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீரராக இருந்த பொழுதும் மேலும் மென்டராக இருந்த பொழுதும் விராட் கோலியிடம் களத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருமே ஆக்ரோஷமாக நடந்துக்கொள்வதை பார்த்திருப்போம்.
அவ்வாறு நிகழும் சச்சரவுகள் மிகவும் பரபரப்பாக விவாதத்திற்கு உள்ளாகும். ஆனால், கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்புக்கு வந்த பிறகு இருவருமே நல்ல நட்பை காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், “நாங்கள் நண்பர்களாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். இது ஒரு நாளும் மாறப்போவது கிடையாது. நான் ஏன் சொல்கிறேன் என்றால், உண்மையில் உங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிய வேண்டும்.
கம்பீர் பேச்சு
மேலும் என்ன நடந்தது என்பதும் உங்களுக்கு தெரிய வேண்டும். நீங்கள் வெவ்வேறு இரண்டு அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொழுது உங்கள் அணிக்காக நீங்கள் போராட வேண்டி இருக்கும். அதே சமயத்தில் களத்திற்கு வெளியே நீங்கள் என்ன மாதிரியான நட்பை உறவை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டியது கிடையாது.
ஏனென்றால் அவர்கள் டிஆர்பிக்காக பல்வேறு விஷயங்களை பேசினார்கள். எனக்கும் விராட் கோலிக்கும் காலத்தில் பிரச்சனை ஏற்பட்ட பொழுது ஒரு பத்திரிக்கையாளர் இதில் தலையிட்டார். ஆனால் நியாயமாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் அவருடைய வேலையை செய்திருக்க வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக கிரிக்கெட்டிலும் டிஆர்பிக்காகவே விஷயங்கள் பேசப்படுகின்றன. இந்த நாட்டில் எவருக்குமே நான் விராட் கோலி உடன் என்ன மாதிரியான உறவை பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிந்து கொள்வது முக்கியம் கிடையாது.
நாங்கள் இனியும் எப்போதும் நண்பர்களாகத்தான் இருக்கப் போகிறோம். மேலும் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்காக செய்ததை நாம் நேசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
