CSK வில் மீண்டும் இணையும் சுரேஷ் ரெய்னா? வெளியான முக்கிய தகவல்
சுரேஷ் ரெய்னா மீண்டும் CSK அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுரேஷ் ரெய்னா
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை அணிக்காக 10 ஆண்டுகளாக ஆடிய சுரேஷ் ரெய்னா தற்போது மீண்டும் அணிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீல்டிங் பயிற்சியாளர்
சுரேஷ் ரெய்னா 2008-2015, 2018–2021 காலகட்டத்தில் ஆடியுள்ளார். சென்னை அணிக்காக 205 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா 5,528 ரன்கள் குவித்துள்ளார். சென்னை அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற போது சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பெற்றிருந்தார். தோனி இல்லாத நேரத்தில் சில போட்டிகளில் அணியை வழி நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது CSK அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங்கும், பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹசியும் உள்ளனர்.
எனினும், இது குறித்து CSK அணி நிர்வாகமோ, சுரேஷ் ரெய்னாவோ இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Rasipalan: இன்னும் 2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள் Manithan
