IPL 2025 அட்டவணை; CSK விளையாடும் போட்டிகள் எப்போது? - முழு விவரம்
IPL 2025 அட்டவணை வெளியாகியுள்ளது.
IPL 2025
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. 17 ஐபிஎல் தொடர்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 18வது ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது.
சிஎஸ்கே போட்டிகள்
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் என மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கிறது.
இதில் மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள்
மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஏப்ரல் 5 - டெல்லி கேப்பிட்டல்ஸ்
ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏப்ரல்
25 - சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ்
மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ்
மற்ற மாநிலங்களில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள்
மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏப்ரல் 8 பஞ்சாப் கிங்ஸ்
ஏப்ரல் 14 - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ்
மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மே 18 - குஜராத் டைட்டன்ஸ்
இறுதிப்போட்டி
லீக் போட்டிகளின் அடிப்படையில் முதல் 2 அணிகள் குவாலிஃபையர் 1 எனப்படும் தகுதி போட்டிக்கு முன்னேறும். இவ்விரு அணிகளில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும்.
லீக் போட்டிகளின் பாயின்ட்ஸ் டேபிளில் 3 மற்றும் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த அணியுடன் குவாலிஃபையர் 2 என்ற சுற்றில் விளையாடும். இந்த குவாலிஃபைர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.
Mark your calendars, folks! 🥳🗓#TATAIPL 2025 kicks off on March 2️⃣2️⃣ with a clash between @KKRiders and @RCBTweets 🤜🤛
— IndianPremierLeague (@IPL) February 16, 2025
When is your favourite team's first match? 🤔 pic.twitter.com/f2tf3YcSyY
மே 20 ஆம் தேதி முதல் Qualifier போட்டி ஹைதராபாத்திலும், மே 21 ஹைதராபாத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மே 23 ஆம் தேதி 2வது Qualifier போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.