கம்யூனிஸ்ட் கோட்டையில் மலரும் தாமரை - சாதனை வெற்றியில் சுரேஷ் கோபி
நடிகர் சுரேஷ் கோபி கேரளா மாநில திருச்சூர் தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
கேரளா
கம்யூனிஸ்ட்களின் மண்ணான கேரளாவில் இதுவரை பெரிய தாக்கத்தை பாஜக செய்ய முடியாமல் இருந்தது. தொடர்ந்து அம்மண்ணில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் ஆதிக்கமே தொடர்ந்தது.
ஆனால், தனது கால்தடத்தைப்பதிக்க பாஜக கடும் முன்னெடுப்புகளை எடுத்து வந்தது. அதற்கு இம்முறை பலனளித்துள்ளது. கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார் சுரேஷ் கோபி.
மலரும் தாமரை
கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்ட அவர், தேர்தலில் தோல்வியடைந்திருந்தார். ஆனால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி தொடர்ந்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
தற்போது, வெளியாகி வரும் முன்னிலை நிலவரங்களில் சுரேஷ் கோபி 396881 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சுனில் குமாரை விட 73120 வாக்குகளை பெற்றுள்ளார் சுரேஷ் கோபி.
முன்னிலை நிலவரங்களின் படி, சுரேஷ் கோபியே வெற்றி பெறவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கேரளா அரசியலில் முதல் முறையாக கால் பதித்துள்ளது பாஜக.