Breaking News : வேலூரில் கடும் போட்டியில் மன்சூர் அலி கான் - நோட்டா ? முந்தியது யார் தெரியுமா!
வேலூர் மக்களவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார் மன்சூர் அலி கான்.
மன்சூர் அலி கான்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமாகி இருக்கும் நிலையில், பிரபல நடிகர்களை பலரை தொடர்ந்து வில்லன் நடிகர் மன்சூர் அலி கானும் அரசியல் களம் கண்டுள்ளார். நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.
அவருக்கு பலாப்பழ சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரப்படி, வேலூர் தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.
Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
கடும் போட்டி
அவர் 96460 வாக்குகளை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஏ.சி.சண்முகம் 66640 வாக்குகளை பெற்றுள்ளார். சுயேட்சையான மன்சூர் அலி கான் 445 வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் பெற்ற வாக்குகளை விட நோட்டா அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 1407 வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளது.