பாலியல் குற்றச்சாட்டு; செய்தியாளர்கள் கேட்ட கேள்வி - ஆவேசமான சுரேஷ் கோபி!
பல்வேறு நடிகைகள் கேரள நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் அடுக்கி வருகின்றனர்.
சுரேஷ் கோபி
ஹேமா கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகை, நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக புகார்
அளித்ததால் இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கேரள அரசு நியமித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த வாரம் இந்த அறிக்கை வெளியானது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சையான பல பகுதிகள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையில் கேரளத் திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டிருந்தது. இதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் ஹேமா அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
பாலியல் குற்றச்சாட்டு
இதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகள் கேரள நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள் அடுக்கி வருகின்றனர். இதனால் மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் கேரள திருச்சூரில் மலையாள முன்னணி நடிகரும் பா.ஜ.க. எம்.பி மற்றும் இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்க செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளாதப்படி, அவரது காரை நோக்கி வேகமாக சென்றார்.
அப்போது ஒரு செய்தியாளர் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்டார். உடனே சுரேஷ் கோபி, அவரை தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது செயலுக்குக் கண்டனங்களும் எழுந்து வருகிறது.