நடிகைகளின் பாலியல் புகார் எதிரொலி - கூண்டோடு கலைக்கப்பட்ட நடிகர் சங்கம்
நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது.
ஹேமா ஆணைய அறிக்கை
ஹேமா கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகை, நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக புகார் அளித்ததால் இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கேரள அரசு நியமித்தது.
நடிகைகளிடம் அத்துமீறல்; திரையுலகை கட்டுப்படுத்தும் 15 முக்கிய புள்ளிகள் - ஹேமா அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை
இந்த ஆணையம் விசாரணையை முடித்து 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த வாரம் இந்த அறிக்கை வெளியானது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சையான பல பகுதிகள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையில் கேரளத் திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டிருந்தது. இதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் ஹேமா அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ராஜினாமா
இதனையடுத்து ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினி முனீர் உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாக நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், ஜெயசூர்யா, மணியன் பிள்ளை ராஜு, இடவேலா பாபு, முகேஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் புகார்களை வைத்தனர். இது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க 7 காவல் அதிகாரிகள் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
இதன் பின் நடிகர் சங்க பொது செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்தார். இதனையடுத்து காலாசித்ரா அகாடமி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது மலையாள நடிகர் சங்க(Association of Malayalam Movie Artists) தலைவர் பதவியிலிருந்து மோகன் லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவருடன் மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்ததால் AMMA செயற்குழுவும் கலைக்கப்பட்டுள்ளது.