என்னை தொந்தரவு செய்தனர்..செய்தியாளர்கள் மீது வழக்கு - அமைச்சர் சுரேஷ் கோபி புகார்!
அமைச்சர் சுரேஷ் கோபி, செய்தியாளர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
சுரேஷ் கோபி
ஹேமா கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகை, நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் நடிகர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக புகார்அளித்ததால் இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை கேரள அரசு நியமித்தது.
அந்த அறிக்கையில், கேரளத் திரைத்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் எனவும் சொல்லப்பட்டிருந்தது. இதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது.
செய்தியாளர்கள்
இந்த சூழலில் கேரள திருச்சூரில் மலையாள முன்னணி நடிகரும் பா.ஜ.க. எம்.பி மற்றும் இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்க செய்தியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் அவர் கண்டுகொள்ளாதப்படி, அவரது காரை நோக்கி வேகமாக சென்றார். அப்போது ஒரு செய்தியாளர் ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாகக் கேள்வி கேட்டார். உடனே சுரேஷ் கோபி, அவரை தள்ளிவிட்டார். இந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன்னை வழிமறித்த பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். பத்திரிகையாளர்கள் தனது பாதுகாப்பு அதிகாரியை கடமைகளை செய்ய விடாமல் அச்சுறுத்தியதாகவும்,
இடையூறு விளைவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதன்படி, தன்னை காரில் ஏற விடாமல் தடுத்ததாக சுரேஷ் கோபி அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சூரில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மீது நேற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.