மந்திரி பதவியெல்லாம் வேண்டாம்; அதுதான் வேண்டும் - சுரேஷ் கோபி தடாலடி!
மந்திரி பதவி வகிக்க விருப்பமில்லை என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
நடிகர் சுரேஷ் கோபி
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கேரளா, திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர், 4,12,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கேரளாவில் பாஜக காலூன்றியுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சூருக்கு சென்ற சுரேஷ் கோபிக்கு பாஜக சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மந்திரி பதவி
இந்நிலையில் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "மந்திரி பதவி வகிக்க எனக்கு விருப்பமில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு செய்யக்கூடிய பணிகள் அதிகம் உள்ளன. கேரள மக்களுக்கான திட்டத்தை நான் கொண்டு செல்லும்போது,
சம்பந்தப்பட்ட மந்திரிகள் அதை செயல்படுத்த வேண்டும். அதையே நான் விரும்புகிறேன்.
திருச்சூரில் வெற்றிபெற்றதால் எனது பணி இங்கு மட்டும் நின்றுவிடாது. அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.