கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை - குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத்தில் கடும் நெருக்கடி காரணமாகக் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்
இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில் தொழில் செய்து வருகின்றனர்.ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்தியாவில் வைரங்களின் வருகையைக் கடுமையாகப் பாதித்துள்ளன.கடந்த மூன்று ஆண்டுகளாக வைர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதனால் கைவினைஞர்களை வேலையின்மையால் தவித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கான சம்பளங்கள் 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை
இதுகுறித்து, குஜராத் வைரத் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பாவேஷ் டாங்க் கூறுகையில்``கடந்த 6 மாதங்களில் நிதி நெருக்கடி காரணமாக 60-க்கும் மேற்பட்ட வைரக் கைவினைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனால் அவர்களின் குடும்பங்கள் துயரங்களை அரசோ அல்லது தொழில்துறையோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil