மருமகள் நடத்தை; வாயில் மண்ணை திணித்து குழந்தை கொலை - மாமியார் கொடூரம்!
வாயில் மண்ணை திணித்து 1 வயது குழந்தையை மாமியார் கொலை செய்துள்ளார்.
மருமகள் நடத்தை
அரியலூர், கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சந்தியா(21). இவர்களுடைய மகன் மோனிஷ் (2), மகள் கிருத்திகா (1). ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், சந்தியா தனது குழந்தைகளை வீட்டின் முன்பு விட்டுவிட்டு அருகே உள்ள பால் பண்ணைக்கு பால் ஊற்ற சென்றுள்ளார். பின் திரும்பி வந்து பார்த்ததில் மகள் கிருத்திகா சுயநினைவு இன்றி வாயில் மண்ணுடன் கிடந்துள்ளார்.
மாமியார் வெறிச்செயல்
அதிர்ச்சியடைந்து உடனே மருத்துவமனை கொண்டு சென்றதில் அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன்பின், சந்தியா அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாமியார் விருத்தம்பாள்(60) மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தியதில், கிருத்திகா எனது மகனுக்கு பிறக்கவில்லை என்று சந்தியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தேன். சம்பவத்தன்று எனது பேரன் மோனிஷ் மீது கிருத்திகா மண்ணை அள்ளிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்தாள்.
இதில் ஆத்திரம் அடைந்த நான் கிருத்திகா வாயில் மண்ணை திணித்தேன். இதில் மயங்கி விழுந்து கிருத்திகா இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விருத்தம்பாள் கைது செய்யப்பட்டுள்ளார்.