ரோட்டில் கொட்டி கிடக்கும் வைரம்; சாலையை தூர்வாரிய மக்கள் - ஷாக் பின்னணி!

Gujarat Viral Video
By Sumathi Sep 28, 2023 09:36 AM GMT
Report

 வீதிகளில் வைரம் கொட்டிக் கிடப்பதாக மக்கள் தேடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வைர வியாபாரம் 

சூரத்தில் பரபரப்பாக வைர வியாபாரம் நடக்கும் ஒரு இடம் தான் வராச்சா. அந்த சந்தையில் வியாபாரம் நடக்கும் பொழுது ஒரு வைர வணிகரிடம் இருந்த வைரங்கள் சிதறி வீதிகளில் வீதியில் விழுந்து விட்டது என்று கூறப்படுகிறது.

ரோட்டில் கொட்டி கிடக்கும் வைரம்; சாலையை தூர்வாரிய மக்கள் - ஷாக் பின்னணி! | Surat People Search Diamonds On Streets Video

இதை அறிந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக திரண்டு வீதிகளில் வைரத்தை தேடத் துவங்கி விட்டனர். இதுகுறித்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோ

இதனால் பொருளாதார வீழ்ச்சி காரணமாகத்தான் வைர வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் வைரத்தை தெருக்களில் இரைந்து சென்றிருக்கிறார்கள் என்று பேசி வருகின்றனர். தொடர்ந்து, தெருவில் கிடைத்த ஒரு வைரத்தை, நபர் ஒருவர் பரிசோதித்துள்ளார்.

அப்போதுதான் அவை உண்மையான வைரம் அல்ல, அவை வைரக்கல் போலவே தோற்றமளிக்கும் அமெரிக்கன் டையமன்ட். இந்த போலியான வைர கற்கள், இமிடேஷன் நகைகள் செய்வதற்கும், ஆடைகளை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்பது தெரியவந்துள்ளது. 

விவசாய நிலத்தில் வைரம்; பெண் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் - மதிப்பு ரூ.12 லட்சம்!

விவசாய நிலத்தில் வைரம்; பெண் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் - மதிப்பு ரூ.12 லட்சம்!