உலகின் 3-வது மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு - எந்த நாட்டில் தெரியுமா?

world
By Nandhini Jun 20, 2021 07:43 AM GMT
Report

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு பகுதியில் போட்ஸ்வானா நாடு இருக்கிறது. இந்த நாட்டில் 23 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். போட்ஸ்வானா நாட்டில் 4 மிகப்பெரிய வைர சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

அந்நாட்டு அரசுக்கு 50 சதவீதம் வைரங்கள் விற்பனை மூலம் வருவாய் கிடைக்கிறது. கொரோனா வைரஸால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் வைரங்கள் விற்பனை குறைந்துள்ளது. இதனால், போட்ஸ்வானா நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் நிலவி வருகிறது. இந்நிலையில், போட்ஸ்வானா நாட்டில் சுரங்கம் ஒன்றில் அண்மையில் 1,098 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

73 மி.மி. நீளம், 52 மி.மி. அகலம், 27 மி.மி. தடிமன் கொண்ட இது உலகின் 3-வது மிகப்பெரிய வைரமாகும். கடந்த 1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் 3,106 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதான் உலகின் மிகப்பெரிய வைரமாகும். கடந்த 2015-ம் ஆண்டில் போட்ஸ்வானா நாட்டில் 1,109 காரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. இது உலகத்தின் 2-வது பெரிய வைரமாகும். தற்போது போட்ஸ்வானா நாட்டில் உலகின் 3-வது மிகப்பெரிய 1,098 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச சந்தை நிலவரம் மேம்பட்ட பிறகு, 3-வது மிகப்பெரிய வைரம் ஏலம் விடப்படும் என்று போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. 

உலகின் 3-வது மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு - எந்த நாட்டில் தெரியுமா? | World