ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு செக்

V. Senthil Balaji Tamil nadu DMK Supreme Court of India
By Sumathi Apr 23, 2025 12:40 PM GMT
Report

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் இருந்தார்.

senthil balaji

அப்போது அவர் மீது பண மோசடி புகார்கள் எழுந்தன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

தொடர்ந்து ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்த நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின், ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றார்.

நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு; விரக்தியில் சரத்குமார் - இதுதான் பிளானா?

நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு; விரக்தியில் சரத்குமார் - இதுதான் பிளானா?

உச்சநீதிமன்றம் கேள்வி 

இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? செந்தில் பாலாஜிக்கு செக் | Supremecourt Ask To Senthil Balaji About Ministry

ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

சாட்சிகளை செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க செந்தில்பாலாஜி தரப்பில் அவகாசம் கேட்ட நிலையில், திங்கட்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.