தெரு நாய்களை பிடித்து அடைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்
தெருநாய்களைப் பிடித்து, அவற்றை தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
உத்தரவு நிறுத்தம்
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) தெருநாய்களைப் பிடித்து, அவற்றை தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று ஆகஸ்ட் 11-ம் திகதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது, டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் காசியாபாத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு எட்டு வாரங்களுக்குள் தெருநாய்களை காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது.
மேலும், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து பகுதிகளையும் தெருநாய்கள் இல்லாத இடங்களாக மாற்ற வேண்டும் என்றும், எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ இதனை தடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.
எட்டு வாரங்களுக்குள் குறைந்தது 5,000 தெருநாய்களை அடைக்கக்கூடிய தங்குமிடங்களை நிறுவவும் நீதிமன்றம் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது.
இந்தியாவில் நாய்க்கடிகள் பதிவு அதிகமானதால் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு நாய் பிரியர்கள் உள்பட பலரும் எதிர்ப்புகளை கடுமையாக தெரிவித்தனர்.
இதையடுத்து, நாய்களுக்கு எதிரான பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தை கவனித்துக் கொள்ளும் என்று தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
நீதிமன்ற விசாரணையின் நேரடி ஒளிபரப்பு பல்வேறு அரசு சாரா நிறுவனங்களால் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடைபெற்றது.
தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது அதற்கு பதிலாக நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசியை செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என யோசனை வழங்கியுள்ளது.