தவெக மாநாடு; வேலை வெட்டி இல்லாதவங்க.. விஜய்யை சீண்டிய சீமான்

Vijay Seeman Madurai Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Aug 21, 2025 10:27 AM GMT
Report

தொண்டர்கள் வருவது நாட்டில் பலர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதை காட்டுவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

தவெக மாநாடு

திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தெரு நாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும்.

seeman - vijay

அதனால் பிளேக் நோய் வரும் அதனை கட்டுப்படுத்த போராட வேண்டும். தெரு நாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆர்வலராக இருந்தாலும் தமக்கு பாதிப்பு ஏற்படும் போது பயம் வந்துவிடும் அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக வெற்றி கழக மாநாடு நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான்.

தூய்மைப் பணியாளர்கள் கைது; அவர்கள் தேச விரோதிகளா? விஜய் கண்டனம்!

தூய்மைப் பணியாளர்கள் கைது; அவர்கள் தேச விரோதிகளா? விஜய் கண்டனம்!

சீண்டிய சீமான் 

முதல் நாளே மாநாட்டிற்கு சென்றது நாட்டில் வேலை இல்லாமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது என்பது மகிழ்ச்சியான விஷயம். அதனை வரவேற்கிறேன்.

தவெக மாநாடு; வேலை வெட்டி இல்லாதவங்க.. விஜய்யை சீண்டிய சீமான் | Seeman Criticizes Tvk Vijay Volunteers

தெருவுக்குத் தெரு மது கடைகளை திறந்து வைத்துவிட்டு போதையை ஒழிப்பேன் என கூறுவது எப்படி. அவர்கள் பாஷையில் குடிசை ஒழிப்பு என கூறி குடிசையை கொளுத்தி விட்டு குடிசை ஒழிப்பு என்பார்கள். அதேபோல மது ஒழிப்பு எனக்கூறி மதுவை குடித்து தான் ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.