செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
அமலாக்கத்துறையிடம் விசாரணை நடத்த செந்தில் பாலாஜியை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இறுதியில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அப்பொழுது அவரை அமலாக்கத்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்ததாக கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
நீதிமன்றன் உத்தரவு
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானது என்று கூறி அவரை 5 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும்,
அவரை வரும் 12-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் இன்று கிடைத்த உடன் உடனடியாக புழல் சிறைக்கு சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.