ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எதிராக வழக்கு.. செயலாளருக்கு நோடீஸ் - உச்சநீதிமன்றம் அதிரடி!

M K Stalin DMK BJP R. N. Ravi Supreme Court of India
By Vinothini Nov 10, 2023 09:30 AM GMT
Report

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. n

தமிழக அரசு

கவர்னருக்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், "தமிழக அரசின் செயல்பாடுகளை கவர்னர் ஆர்.என்.ரவி முடக்குகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கூட அவர் கையெழுத்திடவில்லை.

supreme-court-notice-to-governor-regarding-tn-case

பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க கவர்னர் மறுப்பு தெரிவிக்கிறார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசின் உரிமை மட்டுமல்ல, தனி நபரின் உரிமையும் பறிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை கவர்னர்களால் ஏற்படும் பிரச்சினையை சொல்லும் வகையில் வழக்கை தொடர்ந்து உள்ளோம்" என்று தெரிவித்திருந்தனர்.

இனி பள்ளி மதிய உணவில் பிரியாணி - அரசு அசத்தல் அறிவிப்பு!

இனி பள்ளி மதிய உணவில் பிரியாணி - அரசு அசத்தல் அறிவிப்பு!

நீதிமன்றன்

இந்நிலையில், நீதிபதிகள் "தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கிறோம். கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பிறகு விசாரிக்கலாமா" என்று கேட்டனர். மேலும், இந்த வழக்கில் எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

supreme-court-notice-to-governor-regarding-tn-case

இது குறித்து, கவர்னரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.