செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படுமா? இன்று வெளியாகும் தீர்ப்பு!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது .
இந்த புகாரின் அடிப்படையில்,கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு பல்வேறு சோதனைகளுக்கு பிறகு செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் உள்ள அவருக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தற்பொழுது ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜாமின் மனு
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி திபதிகள் அபய் ஒகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமின் வழங்கியது
இந்த நிலையில்,ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.