உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர் நீதி மன்றத்தில் ஆட்கொனர்வு மனுவை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என்றும் அவர் பரிபூரணமாக குணமடைந்த பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
தற்போது செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து மாற்றப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீடு
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த வழக்கில் மெகலா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை முன்கூட்டியே கோவியட் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.