பெரியார் சிலை..கடவுள் மறுப்பு வாசகங்கள் - தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Periyar E. V. Ramasamy Tamil nadu Supreme Court of India
By Sumathi Sep 12, 2022 08:10 AM GMT
Report

பெரியார் சிலைக்கு கீழ் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க கோரிய மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுள் மறுப்பு வாசகம் 

தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி

பெரியார் சிலை..கடவுள் மறுப்பு வாசகங்கள் - தமிழக அரசுக்கு நோட்டீஸ் | Supreme Court About Periyar Statue

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும்,

 உச்சநீதிமன்றம்  உத்தரவு

இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள்,

கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணர்வை புண்படுத்துகிறது. கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க அரசு பணம் செலவு செய்ய முடியுமா? எனத் தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.