திருப்பதியில் இந்த ஒரு மாதம் சுப்ரபாதம் ஒளிக்கப்படாது - என்ன காரணம் தெரியுமா?

India Astrology Tirumala
By Swetha Dec 11, 2024 01:30 PM GMT
Report

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு சுப்ரபாதம் கேட்காது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சுப்ரபாதம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் சுப்ரபாதம் ஒளிக்கப்பட்டு சேவை நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்குவதுதான் வழக்கம்.

திருப்பதியில் இந்த ஒரு மாதம் சுப்ரபாதம் ஒளிக்கப்படாது - என்ன காரணம் தெரியுமா? | Suprapadam Will Not Be Played In This Whole Month

ஆனால் இந்த மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, ஏழுமலையானை துயில் எழுப்புவது ஐதீகமாக உள்ளது. ஆகையால் இந்த திருப்பாவை சேவை இம்முறை டிசம்பர் மாதம் 17ம் தேதி அதிகாலை முதல் தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்!

சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்!

என்ன காரணம்?

இந்த நிலையில், வருகின்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி காலை 6.57 மணிக்கு மார்கழி பிறப்பதால், அதற்குள் சுப்ரபாதம் பாடப்படும் எனவும் மறுநாள் 17-ம் தேதி முதல் திருப்பாவை சேவை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இந்த ஒரு மாதம் சுப்ரபாதம் ஒளிக்கப்படாது - என்ன காரணம் தெரியுமா? | Suprapadam Will Not Be Played In This Whole Month

12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராக போற்றி புகழப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் பாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.