2050க்குள் 4 கோடி பேரைக் கொல்லும் சூப்பர்பக்ஸ் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
2050க்குள் சூப்பர்பக்ஸ் சுமார் 40 மில்லியன் மக்களைக் கொல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்பக்ஸ்
உயிர்கொல்லி நோயான சூப்பர்பக்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின்
அதிகப்படியான பயன்பாடு மற்றும் தவறான மருத்துவ ஆலோசனை ஆகியவை சூப்பர்பக்ஸ் பரவுவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
இந்த பாதிப்பால் நிமோனியா, காசநோய் (டிபி) மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற பொதுவான நோய்களுக்கான சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காது. இதன் விளைவாக, உடல் முழுவதும் தொற்று பரவும் ஆபத்து அதிகரிக்கிறது. அறுவை சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
அதிர்ச்சி தகவல்
புற்றுநோயாளிகளுக்கு நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, சிறுநீரக நோய் அல்லது நுரையீரல் நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலையை சூப்பர்பக்ஸ் இன்னும் மோசமாக்கும். மரணம் கூட ஏற்படலாம்.
இந்த நிலை 2050 ஆம் ஆண்டில் உலகளவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து விலகியிருக்க, சோப்பு மற்றும் தண்ணீருடன் அடிக்கடி கைகளை கழுவவும் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் பயன்படுத்தவும்.
உணவை சரியாக சமைத்து, சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துங்கள். நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சாப்பிட வேண்டாம்.