கேக்குகளில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கண்டுபிடிப்பு? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கர்நாடகாவில் சில ஸ்நாக்ஸில் அபாயகரமான செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.
கர்நாடகா
கோபி மஞ்சூரியன், சிக்கன், மீன், மட்டன் மற்றும் எண்ணெய்யில் பொறிக்கப்படும் ஸ்நாகஸ்கள், கபாப்களில் செயற்கை நிறம் சேர்க்க உணவுத்துறைபாதுகாப்பு துறை தடை விதித்திருந்தது.குறிப்பாகக் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயிலும் செயற்கை நிறங்களைச் சேர்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் விதியை மீறி கர்நாடகாவில் நிறமிகள் சேர்க்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.அதுமட்டுமில்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்கில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாகப் புகார் அளிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து கர்நாடகாவில் உணவுத்துறைபாதுகாப்பு துறை, சார்பில் பல்வேறு இடங்களிலில் தயாரிக்கப்பட்ட 12 விதமான கேக் மாதிரிகளைச் சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியது.
செயற்கை நிறமிகள்
சோதனையின் முடிவில், கேக் செய்யச் சேர்க்கப்படும் பொருட்கள் புற்றுநோய்க்குக் காரணமாகக்கூடும். இத்தகைய கேக்குகள் சாப்பிடத் தகுந்தது அல்ல. குறிப்பாக பிளாக் பாரெஸ்ட், ரெட் வெல்வெட் கேக்குகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமி அதிக அளவில் உள்ளது.
இதனால்அலர்ஜி, ஆஸ்துமா, புற்றுநோய், அஜீரணக் கோளாறு, தலைவலி, சரும பிரச்சனை, சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.