இதை நீங்க சாப்பிடுவீங்களா? மனுசந்தான திங்கறான் - விளாசிய அதிகாரி, திணறிய ஓனர்!
கெட்டுப்போன இறைச்சி, மீன் என உணவுகளை ஹோட்டல்களில் இருந்து அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கெட்டுப்போன இறைச்சி
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
சிவகங்கையில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுமார் 1000 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் சோதனை
சென்னை, விருதுநகர் அய்யனார் ஓட்டலுக்குச் சென்று சோதனையிட்டதில், கெட்டுப்போனதை வைச்சிருக்கீங்களா? இதெல்லாம் மனுசந்தான திங்கறான். இவ்ளோ ஈக்கள் இருந்தால் வாந்தி, பேதி ஏன் வராது?
சில உணவுகளை எடுத்து தட்டில் போட்டு இதை நீங்களே சாப்பிடுங்கள் என்று அதிகாரி உரிமையாளரை கூறினார். அதற்கு அவர் சமாளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த கெட்டுப்போன இறைச்சி அழிக்கப்பட்டது.
மேலும், திருப்பூரில் அதிக செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, கெட்டுப்போன கோழி இறைச்சி சுமாா் 16 கிலோ, கெட்டுப் போன மீன் இறைச்சி 3.5 கிலோ, காலாவதி ஆகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த சுமாா் 750 கிராம் மயோனிஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.