ஆபத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்? - விண்வெளி நிலையத்தில் உள்ள பிரச்சனை
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ்
நாசாவில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் , 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டார். 27 மணிநேர பயணத்துக்கு பிறகு 6 ம் தேதி இரவு 11 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.
விண்வெளிக்கு சென்றதும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் சுனிதா வில்லியம்ஸ் நடமாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது. இந்த பயணத்தின் போது இவர் மீன் குழம்பு மற்றும் விநாயகர் சிலையை தன்னுடன் விண்வெளி நிலையத்திற்கு எடுத்து சென்றார்.
சூப்பர் பக்
தற்போது, சர்வேதேச விண்வெளி நிலையத்தில் 'சூப்பர் பக்' என்று அழைக்கப்படும் ஒரு பயங்கரமான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா மனிதர்களது சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது.
இந்த பாக்டீரியா பூமியிலிருந்து தான் விண்வெளிக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. விண்வெளியில் மூடிய சூழலில் இந்த பாக்டீரியா மிகவும் ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.