விண்வெளியில் மீன்குழம்பு - சுனிதா வில்லியம்ஸ் சொன்ன காரணம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளி சென்றுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். விண்வெளி பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) இவர் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டார்.
சர்வதேச விண்வெளி நிலையம்
27 மணிநேர பயணத்துக்கு பிறகு 6 ம் தேதி இரவு 11 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். விண்வெளிக்கு சென்றதும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் சுனிதா வில்லியம்ஸ் நடமாடிய வீடியோஇணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
Take a tour of #Starliner! We're streaming live from the @Space_Station with @NASA_Astronauts Butch Wilmore and Suni Williams: https://t.co/9Ez21vdkFQ
— NASA (@NASA) June 8, 2024
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். அங்கு 8 நாட்கள் தங்கி ஆய்வு செய்து விட்டு அதன் பிறகு பூமிக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளனர்.
மீன்குழம்பு
இந்த பயணத்தின்போது சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் மீன்குழம்பு எடுத்து சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு முறை விண்வெளி பயணம் செய்யும்போதும் சில பொருட்களை தன்னுடன் விண்வெளிக்கு எடுத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இதற்கு முன்பு சென்ற பொது பகவத் கீதை மட்டும் சமோசா ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளார். தற்பொழுது மீன் குழம்புடன் விநாயகர் சிலையும் கொண்டு சென்றுள்ளார். மேலும் மீன் குழம்பு தன்னுடன் இருப்பதால் வீட்டில் இருப்பது போன்ற உணர்வதாக தெரிவித்துள்ளார்.