விண்வெளி நிலையத்தில் இருந்து கால்பந்து போட்டியை பார்த்த விண்வெளி வீரர்

Astronaut Euro Cup 2021
By Petchi Avudaiappan Jun 25, 2021 10:22 AM GMT
Report

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரான்ஸ்-போர்ச்சுகல் போட்டியை விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டு ரசித்துள்ளார்.

யூரோ 2020 தொடரின் லீக் ஆட்டத்தில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான பிரான்ஸ் மற்றும் நடப்பு யூரோ கோப்பை சாம்பியனான போர்ச்சுகல் அணிகள் மோதின.

இந்தப் போட்டியை கோடான கோடி ரசிகர்கள் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து பார்த்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்த ஆட்டத்தை விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் பார்த்து ரசித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள அவரை ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்துள்ளனர். அதில் ஒருவர்,“ஆகாயத்திற்கு பறக்கும் பெனால்டி பந்துகளை தாமஸ் விண்வெளியில் கேட்ச் செய்வார்” என தெரிவித்து இருந்தார். இந்த போட்டி 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.