இதுதான் கடைசி ஆசை; இப்படித்தான் சாகணும் - வைராலாகும் சூப்பர் ஸ்டார் பேச்சு!

Shah Rukh Khan Bollywood Switzerland
By Sumathi Oct 18, 2024 06:00 PM GMT
Report

மரணம் குறித்து பேசியுள்ள ஷாருக்கான் வீடியோ வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்

சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

shah rukh khan

விருதைப் பெற்ற பின் பேசிய அவர், நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்‌ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிகக் வேண்டும். ஆனால், ஆக்‌ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது.

3 முறை தற்கொலை முயற்சி? குழந்தை இருப்பதை உறுதிசெய்த பாக்யராஜ் மகள் - கணவர் யார்?

3 முறை தற்கொலை முயற்சி? குழந்தை இருப்பதை உறுதிசெய்த பாக்யராஜ் மகள் - கணவர் யார்?

கடைசி ஆசை

நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு. நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒன்றும் தீவிரமான நடிகர் கிடையாது. நான் நடிப்பது தொடர்பான சில அற்புதமான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தினேன்.

இதுதான் கடைசி ஆசை; இப்படித்தான் சாகணும் - வைராலாகும் சூப்பர் ஸ்டார் பேச்சு! | Super Star Shah Rukh Khan Shares Last Wish Viral

நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நடிப்பின் மூலம் கொண்டாடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, மக்களை எந்த வகையிலும் என்னால் சந்தோஷமடையச் செய்ய முடியும். நான் எனது சந்தோஷத்தையும் பிறரிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னால் முடிந்த வரை அன்பைக் கொடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். தற்போது, இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஷாருக்கான் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.