பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் ஸ்ருதிஹா - இதுதான் காரணமா ? ஷாக்கில் ரசிகர்கள்!

Tamil Cinema Bigg Boss Salman Khan
By Vidhya Senthil Oct 15, 2024 02:49 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஸ்ருதிஹா வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹிந்தி  பிக் பாஸ்

ஹிந்தியில் பிக் பாஸ் 18வது சீசன் கடந்த அக்டோபர் 6தேதி தொடங்கப்பட்டது. இதில் தமிழிலிருந்து முதல் முறையாகத் தமிழ் நடிகையாக ஸ்ருதிகா கலந்து கொண்டிருக்கிறார். ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை கலந்து கொண்டது தமிழ் ரசிகர்களைப் பெருமைப்படச் செய்தது.

hindi bigboss

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹா தனது குழந்தைத்தனமான பேச்சு மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதனால் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு .ஆனால் ஹிந்தி ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாவை பற்றித் தெரியாததால் இவர் நடிக்கிறார், இவர் பொய்யாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

பெரிதாக இருந்தாலும் எனக்கு அதுதான் அழகு - வெளிப்படையாக சொன்ன மிருணாள் தாகூர்

பெரிதாக இருந்தாலும் எனக்கு அதுதான் அழகு - வெளிப்படையாக சொன்ன மிருணாள் தாகூர்

ஆனால் நாளடைவில் அவருடைய இயல்பான குழந்தைத்தனத்தைப் புரிந்து கொண்ட ஹிந்தி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஸ்ருதிஹா வெளியேற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஸ்ருதிஹா

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த மொழியில் நிகழ்ச்சி நடக்கிறதோ அதே மொழியில் தான் அங்கு பேச வேண்டும். ஆனால் ஸ்ருதிஹா தொடர்ந்து அங்கு ஹிந்தியில் பேசாமல் அடிக்கடி தமிழில் பேசி பிக்பாஸிடம் சிக்கிக் கொள்கிறாரென்று கூறப்படுகிறது.

shruthika

இதனால் ஸ்ருதிஹா பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இது பற்றி சல்மான்கான் இந்த வாரம் என்ன சொல்லப் போகிறார் என்றும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

முன்னதாக பிக் பாஸ் தமிழில் கூட ஒரு போட்டியாளர் தொடர்ச்சியாக மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்த போது கமல்ஹாசன் வார்னிங் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.