இந்தியாவில் இன்றிரவு வானில் தோன்றும் சூப்பர் மூன்... - மக்கள் கண்டுகளிக்கலாம்

By Nandhini Jul 13, 2022 08:20 AM GMT
Report

சூப்பர் மூன்

2022ம் ஆண்டு வானில் தோன்றும் ‘சூப்பர் மூன் அல்லது பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் பெருநிலவு இன்று இரவு காட்சியளிக்க உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடும்.

பூமியின் நிழல் தான், நிலவில் படும். அப்போது, பூமி - நிலவு இடையேயான சராசரி தொலைவானது 3.84 லட்சம் கி.மீ.,யை விட குறைவாக இருக்கும். அப்போது, 'சூப்பர் மூன்' தோன்றும். அப்போது நிலவு 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் மின்னும்.

Super moon

இந்தியாவில் கண்டுகளிக்கலாம்

சூப்பர் மூன் ஏற்படும் போது, பூமிக்கு அருகில் நிலவு வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது. இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், 'ஆரஞ்சு' முதல் ரத்த சிவப்பு நிறத்தில் நிலா தெரியும். இதை 'ரத்த நிலா' என்று சொல்லப்படுகிறது.

2022-ஆம் ஆண்டிற்கான ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை தோற்றமளிக்கும் இந்த சூப்பர் மூன் இந்திய மற்றும் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12 மணியளவில் காட்சியளிக்க இருக்கிறது.         

விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து