இன்றுவரை கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படும் கிராமம் - ஏன் தெரியுமா..?
அமெரிக்காவின் சுபாய் என்ற இடத்தில் இன்றுவரை கழுதை மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறது.
சுபாய் கிராமம்
அமெரிக்காவின் கிராண்ட் கேன்யன் என்ற பகுதியில் ஹவாசுபாய் பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு சுபாய் என்ற ஒரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றி நீர்வீழ்ச்சிகள், டர்க்கைஸ் குளங்கள் மற்றும் உயர்ந்த பள்ளத்தாக்கு சுவர்கள் உள்ளன.
இங்கு குதிரை அல்லது ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியும். இது அமெரிக்காவின் மிகத் தொலைதூர குடியேற்றமாக கருதப்படுகிறது. இந்த தொலைதூரம் காரணமாக சுபாய் கிராமத்தில் அஞ்சல் விநியோக சேவைகளுக்கான உள்கட்டமைப்பு இல்லை. இதனால் யுனைடெட் ஸ்டேட்ஸ் தபால் சேவை, ஒரு தனித்துவமான முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அஞ்சல் சேவை
அதாவது கழுதைகள் மூலம் இக்கிராமத்திற்கு அஞ்சல் சேவை செய்யப்படுகிறது. இதற்காக, கழுதைகளும் அவற்றின் கையாளுபவர்களும் ஹவாசுபாய் பாதையில் 8 மைல் மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த பாதை செங்குத்தான பாறை நிலப்பரப்பு வழியாகச் செல்கிறது. சுபாய் கிராமம் அமைந்துள்ள பள்ளத்தாக்கு தளத்திற்கு கிட்டத்தட்ட 2,000 அடி கீழே இறங்குகிறது. இது சவாலான நிலப்பரப்பாக இருந்தபோதிலும் அங்குள்ளவர்களுக்கு அஞ்சல் சென்றடைகிறது. மேலும், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய இந்த பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது.