இந்தியாவின் Recent Sensation - காவ்யா மாறன் சொத்து மதிப்பு தெரியுமா?
ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றிருப்பவர் காவ்யா மாறன்.
காவ்யா மாறன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், ஐபிஎல் தொடரின் முக்கிய ஃபோகாசாக இருந்து வருகிறார். அவரை பார்க்கவே சன்ரைசர்ஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஹைதராபாத் அணியை சன் குழுமம் வாங்கிய பிறகு அணியின் CEO'வாக 2018-ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டுள்ளார் காவ்யா மாறன்.
காவ்யா மாறன் பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கலாநிதி மாறனின் மகள். கலாநிதி மாறன் காவேரி மாறன் - தம்பதிக்கு 1992 ஆம் ஆண்டு பிறந்தார் காவ்யா மாறன்.
சொத்து மதிப்பு...
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டமும், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும் பெற்ற காவ்யா சன் தயாரிப்பிலும் அதீத கவனம் செலுத்தி வருகின்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் தான் கலாநிதி மாறன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. கலாநிதி மாறனின் சொத்து நிகர மதிப்பு சுமார் 19 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.
அதே போல, தனிநபராக காவ்யா மாறனின் சொத்து மதிப்பும் சுமார் 409 கோடி ரூபாய் இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.