காவல்துறை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம் - அதிகாரிகள் விளக்கம்!
காவல்துறை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சன்னி லியோன்
உத்திரபிரதேச காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் பங்குபெறும் தேர்வர்கள் காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் (UPPRB) அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோனின் பெயர், புகைப்படம், `12258574' என்ற எண் கொண்ட நுழைவுச் சீட்டில் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதிகாரிகள் விளக்கம்
அதில், சன்னி லியோனின் பெயர் கொண்ட அட்மிட் கார்டும், அவரின் 2 புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் (UPPRB) அதிகாரி கூறுகையில், "வைரலான அட்மிட் கார்டு போலி.
தேர்வுக்கான விண்ணப்பத்தின்போது, ஒரு விண்ணப்பதாரரால் தவறான புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகார்கள் கிடைத்ததும், ஆட்சேர்ப்பு வாரியம் உடனடியாக அந்தத் தவற்றைச் சரிசெய்தது" என்று தெரிவித்துள்ளார்.