குழந்தைகள் முன்பு 2வது திருமணம் செய்த சன்னி லியோன் - அவரே சொன்ன காரணம்
சன்னி லியோன் குழந்தைகள் முன்னிலையில் 2வது முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சன்னி லியோன்
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ஓ மை கோஸ்ட், பெட்டா ராப் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சன்னி லியோன் 2011 ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
2வது திருமணம்
இந்நிலையில் சன்னி லியோன் மாலத்தீவில் வைத்து தனது குழந்தைகள் முன்னிலையில் கணவர் டேனியல் வெப்பரை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் குறித்து பேசிய சன்னிலியோன், "2011 ஆம் ஆண்டு டேனியல் வெப்பரை திருமணம் செய்யும் போது தனக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், தற்போது 3 குழந்தைகள் முன்னிலையில் என் அன்பான கணவர் டேனியல் வெப்பரை மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.
கணவர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இந்த தம்பதிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.