உடல்நிலை இப்படித்தான் இருக்கு; பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த சுனிதா வில்லியம்ஸ்!

NASA Viral Photos Sunita Williams
By Sumathi Nov 13, 2024 04:00 PM GMT
Report

உடல்நிலை குறித்து சுனிதா வில்லியம்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

 சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

உடல்நிலை இப்படித்தான் இருக்கு; பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த சுனிதா வில்லியம்ஸ்! | Sunitha Williams About Health Rumours

எட்டு நாட்களில் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பவேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 150 நாட்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளனர்.

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

வெடித்து சிதறிய செயற்கைகோள் - சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு?

 தற்போதைய நிலை?

இந்நிலையில், சமீபத்தில் நாசா வெளியிட்ட புகைப்படத்தில் விண்வெளியில் எலும்பும் தோலுமாக சுனிதா வில்லியம்ஸ் காட்சியளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல வதந்திகள் பரவியது.

உடல்நிலை இப்படித்தான் இருக்கு; பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த சுனிதா வில்லியம்ஸ்! | Sunitha Williams About Health Rumours

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சுனிதா, தனது உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. முன்பை விட தற்போது ஆரோக்கியமாக இருக்கிறேன் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கிடையில் நாசா செய்தித் தொடர்பாளர் ஜிமி ரசல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து நாசா விண்வெளி வீரர்களும் வழக்கமான மருத்துவ மதிப்பீடுகளுக்கு உட்படுகிறார்கள். அர்ப்பணிப்புள்ள விமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவர்களைக் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.