எப்போது பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்? தற்போதைய நிலை என்ன!
சுனிதா வில்லயம்ஸ் நாளை மறுநாள் பூமிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லயம்ஸ்
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவருடன் புட்ச் வில்மோரும் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்வதற்காக
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 8 நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். பின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'குரூ டிராகன்' விண்கலத்தில் இருவரையும் அழைத்து வருவதாக எலான் மஸ்க் உறுதியளித்தார்.
நாசா தகவல்
அதன்படி, குரூ டிராகன் விண்கலம் பால்கன்9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. இதில், அமெரிக்காவை சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானை சேர்ந்த டகுயா ஒனிஷி, ரஷியாவை சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது சென்றுள்ள விண்வெளி வீரர்கள் 4 பேரும் சில வாரங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்வார்கள் என தெரிகிறது. இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 3:27 மணிக்கு பூமி திரும்புவார் என்றும் ப்ளோரிடா பாலைவனத்தில் விண்கலம் தரையிறங்கவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.