சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் - விண்வெளியில் என்ன பிரச்சனை தெரியுமா?

NASA SpaceX Indian Origin
By Karthikraja Jun 25, 2024 11:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார். விண்வெளி பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) இவர் கொண்டிருக்கிறார். 

sunita williams in space photos

இந்நிலையில் 3 வது முறையாக, கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு புறப்பட்டு 6 ம் தேதி இரவு சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தார். 8 நாட்கள் தங்கி அங்கு ஆய்வு செய்து விட்டு பிறகு பூமிக்கு திரும்பி வர திட்டமிட்டிருந்தனர். 

விண்வெளியில் மீன்குழம்பு - சுனிதா வில்லியம்ஸ் சொன்ன காரணம்

விண்வெளியில் மீன்குழம்பு - சுனிதா வில்லியம்ஸ் சொன்ன காரணம்

ஸ்பேஸ் எக்ஸ்

இதன்படி ஜூன் 13ம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் ஏற்பட்ட காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் விண்கலம் பூமிக்கு திரும்ப 27 நாட்களுக்கு தேவையான எரிபொருள் தான் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

sunita williams in space photos

இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் சுனிதா வில்லியம்ஸை மீட்க நாசா திட்ட மீட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.