நடக்க முடியாத நிலை..விண்வெளியில் புதிய சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்-வைரல் வீடியோ!

India NASA World Sunita Williams
By Vidhya Senthil Jan 31, 2025 07:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

விண்வெளியில் அதிக நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டு சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

விண்வெளி

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாகக் கடந்தாண்டு ஜுன் மாதம் 6ம் தேதி விண்வெளிக்குச் சென்றனர். இந்த திட்டம் வெறும் 9 மாத பயணமாகத் திட்டமிடப்பட்டு பிப்ரவரி 14ம் தேதியே பூமிக்கு திரும்ப வேண்டியிருந்தது.

nasa astronaut sunita williams new record spacewalk

ஆனால், கேப்சூலில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு ஏற்பட்டதன் கார் காரணமாக , பூமிக்கு திரும்ப முடியாமல் 7 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் இருக்கிறார்.

ISRO தலைவர் பொறுப்பில் மீண்டும் ஒரு தமிழர் - வி. நாராயணன் யார் தெரியுமா?

ISRO தலைவர் பொறுப்பில் மீண்டும் ஒரு தமிழர் - வி. நாராயணன் யார் தெரியுமா?

மேலும் அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது கூட இன்னும் உறுதியாக யாராலும் கூற முடியாத நிலையில் விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களுடன் சுனிதா வில்லியம்ஸ் கலந்துரையாடினார்.

 புதிய சாதனை 

அப்போது அவர் பேசுகையில் “நான் நீண்ட காலமாக விண்வெளியில் இருக்கிறேன். இப்போது நடப்பது எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள முயல்கிறேன். நான் நடக்கவில்லை. நான் உட்காரவில்லை. நான் படுக்கவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர் நானும் சக நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் இவ்வளவு காலம் விண்வெளியில் தங்கியிருப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு "அதிர்ச்சிகரமான சம்பவம் என்று கூறினார். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,’’

புட்ச் வில்மோர் 5.5 மணி நேர விண்வெளி நடைப்பயணம் செய்ததாகவும் , சுனிதா வில்லியம்ஸ் 62 மணி நேரம், 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணம் செய்து நாசாவின் அனைத்து நேரப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.