கம்பீரை பாராட்டுவது காலை நக்குவதற்கு சமம் - மோசமாக சாடிய கவாஸ்கர்!
இந்திய அணி விளையாடுவது குறித்து காவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
கோச் கம்பீர்
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. பந்து வீச்சிலும் அசத்தியது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்தியாவும் தற்போது இங்கிலாந்தை பார்த்து பேஸ் பால் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல செய்தி தாளுக்கு சுனில் கவாஸ்கர் எழுதிய பத்தியில்,
"செய்தித்தாள் ஒன்றில் ரோஹித் சர்மாவின் அன்றைய அதிரடி அணுகுமுறையை ‘பாஸ்பால்’ அதாவது இந்திய அணியின் கேப்டன், பாஸ் என்ற பொருளில் பாஸ்பால் என்று எழுதியிருந்ததைப் பார்த்தேன். சில தேய்ந்த பழைய அதிகார மட்டம் கம்பீர்தான் இதற்குக் காரணம் என்பது போல் ‘காம்பால்’ என்று பெயரிட்டனர்.
சாடிய கவாஸ்கர்
இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை மெக்கல்லம்-பென் ஸ்டோக்ஸ் அணுகுமுறையில் அதிரடி அவதாரம் எடுக்க ரோஹித் சர்மா அத்தகைய அணுகுமுறையை சில வருடங்களாகவே கையாண்டு வருவதைப் பார்க்கிறோம். கம்பீர் இப்போதுதான் கோச் ஆக சேர்ந்திருக்கிறார்.
ஆகவே ரோஹித்தின் ஆக்ரோஷத்தை, அணுகுமுறையை கம்பீருக்கு ஏற்றி உரைப்பது அவரது அடிவருடிகளே. அவர்கள் நல்ல தரமான அடிவருடிகள். கம்பீரே இத்தகைய அதிரடி அணுகுமுறையில் ஆடியதில்லை. மெக்கல்லம் ஆடிய வழியில் கம்பீர் ஆடியிருக்கிறாரா என்பதே என் கேள்வி.
இந்த அதிரடி அணுகுமுறைக்கு ஒருவரைப் பாராட்ட வேண்டுமென்றால் அது ரோஹித் சர்மாவை மட்டும்தான். இந்த பால், அந்த பால் என்றெல்லாம் கதைக்காமல் ரோஹித் சர்மாவில் உள்ள ஹிட்டை வைத்து கோஹிட் என்று சொல்லலாம். புதிதாக யோசிக்க வேண்டும், அதை விடுத்து அதே அறுவையான Bazzball என்று ஏன் கூற வேண்டும்” என சாடியுள்ளார்.