கம்பீருக்கு அவரை புடிச்சுருச்சு; சொதப்பினால் கூட வெளியேத்த மாட்டாரு - ஆகாஷ் சோப்ரா

Indian Cricket Team Sanju Samson Bangladesh Cricket Team Gautam Gambhir
By Sumathi Oct 08, 2024 08:30 AM GMT
Report

சாம்சனை, கம்பீருக்கு பிடித்துவிட்டதாக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

சஞ்சு சாம்சன் 

இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்திய அணியில், ஓபனர் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்களை எடுத்த அவர்,

sanju samson - gautam gambhir

அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இறுதியில் இந்தியா 49 பந்துகளை மீதம் வைத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் குறித்து ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டி ஒன்றில்,

மகளின் பாஸ்போர்ட்டில் கையெழுத்திட மறுத்த முகமது ஷமி - விளாசிய முன்னாள் மனைவி

மகளின் பாஸ்போர்ட்டில் கையெழுத்திட மறுத்த முகமது ஷமி - விளாசிய முன்னாள் மனைவி

ஆகாஷ் சோப்ரா தகவல்

‘‘சஞ்சு சாம்சன் குறித்து, தற்போது பேசியே ஆக வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டிகொடுத்திருந்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ‘சஞ்சு சாம்சனை இந்திய அணியில் சேர்க்கவில்லை என்றால், அது இந்திய அணிக்குதான் இழப்பு’ எனக் கூறியிருந்தார்.

aakash chopra

தற்போது, சாம்சனுக்கு ஓபனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாம்சன் தற்போது நல்ல பார்மில் இருப்பதால், வங்கதேசத்திற்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும், அவர் பெரிய ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது. அப்படி சாம்சன் பெரிய ஸ்கோர் அடித்துவிட்டால், டி20-யில் ரெகுலர் ஓபனராக மாறிவிடுவார்.

ஒருவேளை, சாம்சன் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த தொடர்களிலும் ஓபனராகதான் இருப்பார். காரணம், கம்பீருக்கு அவரை பிடித்துவிட்டது. இதனால், கம்பீர், சாம்சனை நீக்க மாட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.