அரசு இவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும்...சுனில் கவாஸ்கர் முக்கிய கோரிக்கை!
ராகுல் ட்ராவிட்டிற்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
சுனில் கவாஸ்கர்
டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அதனை பாராட்டும் வகையில், பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட்-க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுனில் கவாஸ்கர், இந்திய அரசு ராகுல் டிராவிட்டுக்கு பாரத் ரத்னா விருது அளித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாரத் ரத்னா விருது சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
முக்கிய கோரிக்கை
அந்த தலைவர்களின் தாக்கம் அரசியல் கட்சியினரோடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருந்ததால், விருதுகள் அளிக்கப்பட்டன. தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனைகள் நாடு முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதனால் இந்தியாவின் மிகப்பெரிய மரியாதையை ராகுல் டிராவிட்டுக்கு அளிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும். இந்திய நாட்டின் தலைசிறந்த மகன் பாரத் ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வதற்காக காத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு 2014ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.